திருச்சியின் சிகரமாம் மலைக்கோட்டைக்குக் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றோம்.
வெயிலின் தாக்கத்தால் பிஞ்சுகளின் பாதங்கள் சுட்டுவிடுமோ
இத்தனை படிகள் ஏறுவதால் குழந்தைகளின் கால்கள் வலித்து விடுமோ
என்று பயந்தேன்.
இளங்கன்று பயமறியாது என்பார்கள் அதற்கேற்றார் போல் எம்பள்ளியின் இளங்கன்றுகளும் எங்களுக்குக் கால்கள் சுடவுமில்லை வலிக்கவும் இல்லை புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் எங்களின் கைகோர்த்து எங்களுடன் பயணியுங்கள் என்றனர்.குழந்தைகளின் வார்த்தைகள் உள்ளத்தில் புதிய உத்வேகத்தை அளித்தது.தாயுமாணவர் தாயாக மாறி எங்களின் பாதங்களைத் தாங்கிக் கொண்டார்.
திருச்சியின் பெயர்க்காரணமும் மலைக்கோட்டை யின் வரலாறும் மாமல்லனின் புடைப்புச்சிற்பம் பற்றியும் அறிந்து கொண்டு காலையில் சென்ற அதே புத்துணர்ச்சி சிறிதும் குறையாமல் மாலையில் பள்ளித் திரும்பினோம்.