Connoisseurs of SRV

Make Friend with Science - அறிவியலோடு கைகோர்ப்போம்

National Science Conclave – 24, 25 & 26th October 2024

This conclave aims to introduce school science teachers to the world of scientific research. The 21st-century science education demands that students are trained at
1) Learning to learn rather than knowing select factoids in the textbooks.
2) Evaluating knowledge claims rather than just using the knowledge that has been covered in the syllabus.
3) Appreciating knowledge without not just positive feelings but nurture deep and durable involvement.
4) To understand how science works in practice and learn some key features of the scientific method.

1 ஏன் இந்த நிகழ்வு

கலைத்திட்டம் பாடத்திட்டம் என தெரிவு செய்யப்பட்ட சில செய்திகள், கருத்துக்களை கற்பது கல்வி அல்ல; வாழ்நாள் முழுவதும் அவ்வப்போது தேவைப்படும் புதிய புதிய செய்திகளையும் தத்துவங்களையும் எப்படி கற்பது எனக் கற்க கற்பிப்பது தான் 21ஆம் நூற்றாண்டுக்கான கல்வி.

கிருமி வழியே சில நோய்கள் ஏற்படுகின்றன எனவே பொதுசுகாதாரம் தேவை என்பது போன்ற சில அடிப்படை செய்திகள் சில அவசியமாக கற்பது தேவைதான். எனினும் அறிவியல் அறிவு எப்படி உருவாகிறது, எப்படி ஆய்வுகள் நடத்தபடுகின்றன என்பதை குறித்து அறிமுகமே இல்லை என்றால் அறிவியலுக்கும் ஏனைய துறைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அறிவியலின் அடிநாதமே அதன் ஆய்வு முறையும் அறிவியல் மனப்பாங்கும் தான்.
இந்த பின்னணியில் நவீன அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுடன் சேர்ந்து இணைந்து மூன்று நாட்கள் "அறிவியலோடு வாழ" இந்த முகாம் வழி செய்யும்.



பங்கேற்கும் அறிவியலள்ளர்கள் தங்களுடைய துறை சார்ந்த ஆய்வுகளை குறித்து விளக்கம் தருவார்கள். தங்களது ஆய்வு அனுபவங்கள், ஆய்வு முறை முதலிய குறித்து விவரிப்பார்கள். பல்துறை சார்ந்த இந்த எளிமை விளக்கம் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சி உலகை அறிமுகம் செய்யும்.

2 .எதை குறித்து கருத்தாளர் உரை அமையும்?

கிழே உள்ள எதாவது ஒரு பொருள் குறித்து அவர்கள் உரை அமையும்:-

அவர்கள் தற்போது ஈடுபட்டு வரும் ஆய்வு (எடுத்துக்காட்டாக முனைவர் சுதாகர் சுப்பிரமணியம் மேற்கொள்ளும் மண் புழு எப்படி தனது உடலை புத்தாக்கம் செய்துகொள்கிறது என்கிற ஆய்வை விளக்கலாம்)
அவர்கள் ஆய்வு செய்யும் குறிப்பிட்ட துறை குறித்த அறிமுகம் - குறிப்பாக எனென்ன அந்த துறையில் இன்னமும் விளங்காத புதிராக இருக்கிறது - என்னென்ன ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன போன்றவை
இதுவா அதுவா என தற்போது உள்ள குழப்பம் - அது குறித்த ஆய்வு - எடுத்துகாட்டாக இருள் பொருள் என்றால் என்ன; பிரபஞ்சம் எந்த வேகத்தில் விரிவடைந்து கொண்டிருக்கிறது குறித்த அறிவியல் சர்ச்சைகள், இதுவரை இருள்ளக கிடந்த துறையில் நமக்கு கிடைக்கும் புது வெளிச்சம் - எடுத்துகாட்டாக மனித மூளை எப்படி வேலை செய்கிறது இப்படி அமையலாம்.

SRV Public School-Trichy

Trichy - Dindugal High Road,
Pirattiyur West, Trichy- 620009

  • 8903931111, 8903932222

  • 0431 - 2403111

SRV Matriculation School-Samayapuram

Chennai National Highway,
Samayapuram, Trichy- 621112

  • 9626660003

  • 9626660004

SRV Public School-Samayapuram

Chennai National Highway,
Samayapuram, Trichy- 621112

  • 9626660001

  • 9626660002

Social Sharing

Search