அறிஞர் போற்றுதும் - 2019
DATE: 24.08.2019 - Saturday
அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும் விருதுகள் வழங்கும் விழா - 2019 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவரும் எஸ்.ஆர்.வி. பள்ளிகள் தனது கல்விப் பணியில் அறிஞர்களைக் கொண்டாடுவதை சமூகக் கடமையாக ஏற்று பத்தாண்டுகளாக செய்து வருகிறது. “அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும்” எனும் இந்த இனிய விழா ஆகஸ்ட் 24 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சமயபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு சங்கீத கலாநிதி திருமிகு.ஏ.கே.சி. நடராஜன் – கிளாரினெட் வித்வான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றி கிளாரினெட் இசைக்கிறார். மருத்துவச் செம்மல்.பி.எஸ்.மகாதேவன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் பாஸ்கர்சக்தி ஆகியோர் பாராட்டுரை வழங்குகின்றனர். விருதுகளை ஏற்று ஏற்புரை ஆற்றவிருக்கும் அறிஞர் பெருமக்கள் எஸ்.ஆர்.வி வாழ்நாள் “தமிழ்” விருது பெறுபவர் திருமிகு.எ.சுப்பராயலு கல்வெட்டியல் அறிஞர் தமிழ் இலக்கிய விருது பெறுவோர் திருமிகு.சு.வெங்கடேசன் MP எழுத்தாளர் திருமிகு.எஸ்.பக்தவத்சலபாரதி மானுடவியலாளர் சமூக நோக்கு விருது பெறுவோர் திருமிகு.அமர்நாத் இராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் திருமிகு.நக்கீரன் சூழலியலாளர் படைப்பூக்க விருது பெறுவோர் திருமிகு.வெண்ணிலா எழுத்தாளர் திருமிகு.லிபி ஆரண்யா கவிஞர் திருமிகு.ஹாசிப்கான் ஓவியர் திருமிகு. உமா மகேஸ்வரி எழுத்தாளர் சிறப்பு நல்கை விருது கனடா டோரண்டோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை மற்றும் அரசு நூலகம் விருதாளர்களின் படைப்புகளுடன் கூடிய புத்தகக் கண்காட்சி, சிறப்பு ஊர்வலம், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விருது பெறும் அறிஞர்களின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு திரையிடல் ஆகியவை நடைபெறுகின்றன. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என மொத்தம் 5000 நபர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைவர் A.ராமசாமி, செயலாளர் P.சுவாமிநாதன், பொருளாளர் S.செல்வராஜன், துணைத்தலைவர்,M.குமரவேல், இணைச்செயலா் B.சத்யமூா்த்தி, முதல்வா். க.துளசிதாசன் ஆகியோர் செய்துள்ளனர்.