FEP2016

கனவு ஆசிரியரை நோக்கி

ஒரு சிறந்த பள்ளிக்கூடம் என்பது மிகச்சிறந்த ஆசிரியர்களால் நிரம்பியது. நல்ல ஆசிரியர்களே ஒரு பள்ளியின் அடையாளம். ஆசிரியர்கள் திறமையானவர்களாக இருப்பது எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு நல்ல மனம் உடையவளர்களாகவும் சமூகம் குறித்த புரிதல் உள்ளவர்களாகவும் இருப்பது அவசியம். இதை மையமாக வைத்து ஒரு வார ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. தில்லி பல்கலைக்கழக முன்னால் பேராசிரியர் திரு.சுவாமிநாதன், எழுத்தாளர்.பி.எ.கிருஷ்ணன், சென்னை வளர்ச்சி நிறுவன பேராசிரியர்.ஜனகராஜன், மருத்துவர்.அமுதாஹரி,சென்னை ரோஜா முத்தையா நூலக இயக்குநர் திரு.சுந்தர். சூழலியல் செயல்பாட்டாளர் திரு.பியூஸ் மனுஷ், ஊடகவியலாளர் திரு.ஜென்ராம், கல்வியாளர் தமிழ்ச்செல்வி,எழுத்தாளர்கள் திரு.சு.வெங்கடேசன், திருமிகு.ஏ.எஸ்.பத்மாவதி, மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், மனித வள பயிற்றுனர்கள் திரு.ராஜா கோவிந்தசாமி, திரு.ஜே.கார்த்திக் மற்றும் கலந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறப்புரையாற்றி ஆசிரியர்களோடு உரையாடவும் செய்தனர். குழந்தைகளை கையாள்வது, கற்பிப்பது, புதிய நவீன கற்றல் நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊடகம் குறித்த பார்வை, வரலாறு, ஆசிரியர்களுக்கு புரிந்ததும் புரியாததும், குழந்தைகளின் மனவளர்ச்சி, ஆண், பெண் பாலியல் சமத்துவம், இந்திய ஜனநாயகம், தலைமைப்பண்பு, வளர்இளம் பருவத்திற்கான பிரச்சனைகள் என ஒவ்வொரு தலைப்பிலும் சிறகடித்து பறந்தனர் ஆசிரியர்கள். கருத்தாளர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான கலந்துரையாடல் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைப்பில் கனவு ஆசிரியரை நோக்கி – என்ற இந்தப் பயிற்சிப் பட்டறை ஒரு மைல்கல்லாக அமைந்தது.

Login


Visitors Counter