LEADERSHIP2016

எஸ் ஆர் வி பள்ளியில் புதிய மன்றம் துவக்கம்.

சமயபுரம் எஸ் ஆர் வி மெட்ரிக் பள்ளியில் தலைமைப் பண்பு வளர்த்தல் மன்றத்தின் தொடக்கவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி பொருளாளர் செல்வராஜன் தலைமை வகித்துப் பேசினார் பள்ளி முதல்வர் துளசிதாசன் விழாவின் நோக்கம் குறித்து பேசினார்.விழாவில் திருச்சி எஸ் பி செந்தில் குமார் சிறப்பு விருந்தினராகக்க கலந்து கொண்டு பேசியதாவது பள்ளி மாணவ மாணவிகள் பாடப்புத்தகங்கள் படிப்பது மட்டுமே போதாது. பாடப்புத்தகங்களுடன் நூலகங்களுக்கு சென்று நூலகத்தில் உள்ள பல்வேறு புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். எனது பள்ளிப்பருவத்தில் நான் நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் படித்த போது என்னை சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்தார்கள். ஆனால் அவர்களின் கேலி கி்ண்டலை நான் பொருட்படுத்தவில்லை. நான் என் போக்கில் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வந்தேன். பிளஸ் 2 தேர்வு முடிந்ததும் எனது சக நண்பர்கள் பலரும் இன்ஜினியரிங், டாக்டர் என மேற்படிப்பில் சேர்ந்தார்கள். நான் டிகிரிபடித்தேன். ஆனால் அவர்களை விட உயரிய பதவியில் அமைரவேண்டும் என்ற வேட்கை என் மனத்தில் அதிகம் இருந்தது. அதனால் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் போலீஸ் துறையில் என்ககு டிஎஸ்பி பதிவ கிடைத்தது. இப்போது எஸ்பியாக இரக்கிறேன் என்றார். முன்னதாக விழாவில் நாகவியலாளர் பார்த்திபராஜா, பத்ரி சேசாத்ரி, முகம்மது அலி ஆகியோர் தலைமைப் பண்பு குறித்து பேசினர். முன்னதாக மாணவி கிருத்தியா வரவேற்றார். முடிவில் மாணவி தமிழ் மஞ்சு நன்றி கூறினார்.

Login


Visitors Counter