THEATERCLUB2016

வழக்கத்திற்கு மாறாக வீராப்பு காட்டியது நாடகமன்றம். பார்த்திபராஜாவின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் நாடக மன்றத்தினர் நடையில் ஒரு துள்ளல் ஜதியில் ஒரு புதிய வீச்சு தென்பட்டது. பார்த்திபராஜாவே அதை பற்றிசொல்லுகிறார். நாடக மேடையில் நடிகனின் உடலை புரிந்துகொள்வது முக்கியமானது. உடல், மனம், குரல் ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியத்தேவை. இத்தேவையினை நிறைவுசெய்யும் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆட்டம், பாடடம், கொண்டாட்டம் ஆகியன இன்றைய நவீன வாழ்வைவிட்டு எங்கோ போய்விட்டன. நாடகம் அவற்றை உடலுக்கும் மனதிற்கும் நெருக்கமாக்கும் முயற்சியை செய்கிறது. எளிய பாடல் வரிகளை, புதிய லயத்தில் வெளிப்படுத்தும்போது கற்பனை சிறகுவிரிக்கிறது. நாடகப்பயிற்சியில் மாணவர்களின் மனதில் அவ்வாறான ஓராயிரம் சிறகுகள் தயக்கமின்றி, கட்டுப்பாடின்றி, கூச்சமின்றி விரிகின்றன. இன்றைக்கு அளிக்கப்பட்ட நாடகப்பயிற்சிகள் இவற்றை மையமிட்டே அமைந்தன. 

Login


Visitors Counter