READERSCLUB2016

ரீடர்ஸ் போரத்து மாணவர்களின் அக்டோபர் மாதத்து விசிட் தஞ்சை சரஸ்வதி மகால். அழைத்து சென்றவர் எழுத்தாளர்.ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர்.களப்பிரன். ஆசிரியர்கள் மேகலா,ஹசீனா பேகம் மற்றும் மனோஜ் குமார் வழிகாட்டுதலில் மாணவர்கள் சரஸ்வதி மகால் குறித்தும் ஓலைச்சுவடிகள் குறித்தும் கற்றுக்கொண்டனர். தஞ்சை பற்றிய அரைமணி நேர ஆவணப்படம் திரையிடப்பட்டது. ராஜா ராணி வாழ்ந்த வீட்டை சுற்றிப்பார்த்த மாணவர்கள் ராஜா எப்படியிருப்பார்? ராஜாவின் உடை எப்படியிருக்கும்? ராஜா இன்னிக்கு என்ன சாப்பிட்டார் இட்லியா? தோசையா? என்ற கேள்வி எழுப்பிய பொழுது சற்றும் தளராமல் பதில் தந்த எழுத்தாளர். களப்பிரன் ஒரு ஜீஸ் கடையில் லுங்கி கட்டிக்கொண்டு ஜீஸ் தயாரித்தவரை காட்டி இவர்தான் ராஜாவின் வாரிசு என்று சொன்ன பொழுது மாணவர்கள் அடைந்த திகைப்பிற்கு அளவேயில்லை.

Login


Visitors Counter