THULIR2016

மௌனமே உரத்த பேச்சு

 

மௌனமே எங்கள் உரத்த பேச்சு என்று களம் இறங்கியிருக்கின்றனர் விடுதியிலுள்ள மைம் டீம் மாணவ மாணவிகள் 52 பேர். இவர்கள் தங்கள் பயிற்சியாளர் செபாஸ்டின் ராஜீ வெளிப்படுத்தும் சிரிப்பு, கோபம், அழுகை என ஒவ்வொரு முகபாவனைகளையும், உடல் மொழிகளையும் உன்னிப்பாக பார்த்தும் கேட்டும் செயல்படுகின்றனர். ‘கண்ணாடியே உங்கள் நண்பன் உங்கள் தவறுகளை நீங்களே சரிசெய்யலாம்’ என்று பயிற்சியாளர் கூறியவுடன் கண்ணாடியிடம் தஞ்சமடைகின்றனர். தன் மௌன மொழியால் கண்ணாடியிடம் உரையாடி, உறவாடி பழகுகின்றனர். தம் அச்சம், கூச்சம் , வெட்கம் உடல் சார்ந்த பதட்டம் விலகி மாணவ மாணவிகள் மேடை ஏறி நடிப்பு திறமையை வெளிப்படுத்தியபோது அவர்களின் தன்னம்பிக்கையையும் ஆளுமை திறமையையும் கண்டு பெருமிதம் அடைகிறார் பயிற்சியாளர். இவ்வாறு ஒவ்வொரு ஞாயிறுகளிலும் மைம் டீம் மௌத்தால் புரட்சி செய்ய தயாராகின்றனர்.

Login


Visitors Counter