VERUKKUNEER2017

வேருக்கு நீர் - 2017

“மானுடத்தைப் புரிந்துகொள்வோம்”

SRV மேல்நிலைப் பள்ளி சமயபுரத்தில், பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளின் ஒரு பகுதியாக திங்கள் தமிழ் மாதாந்திர நிகழ்வும், வேருக்கு நீர் பயிலரங்கமும் நடைபெற்றன. நிகழ்வில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் பேசியதாவது, ஆசிரியர் என்பவர் யார்? எப்படிபட்டவர் ஆசிரியர்? எப்படிபட்டவர் ஆசிரியர் ஆகார்? பாடம் மட்டும் நடத்துபவர் ஆசிரியர் என்பது சரியா? ஆசிரியரின் தோற்றம், ஆடை, பழகும் முறை, பேச்சின் பலம் – இவைகளுக்கு ஏதேனும் பங்கு உண்டா? ஆசிரியர் மாணவர்க்கு என்ன வார்த்தையை விலக்கி என்ன வார்த்தையை எப்படிப் பேச வேண்டும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை ஆசிரியர்கள் மத்தியில் எழுப்பி, அதற்கான விடைகளை கண்டடைய வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அன்பாக இருக்கவேண்டும். நம் கல்வித்திட்டத்தின் குறைபாடு பிரம்பினால் கணக்கை புரிந்து கொள்ள செய்யமுடியாது. மனிதர்கள் வெற்றியை நோக்கியே ஓடுகிறார்கள். சக மனிதர்களிடம் இருந்து பெரியவர்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். பள்ளிச் சூழல் மேம்பட்டதாக இருக்கவேண்டும். ஆசிரியர்களின் ஒவ்வொரு அசைவும் தோரணையும் மாணவர்களால் கவனிக்கப்படுகிறது. புதுமைகள் எதுவானாலும் மாறிவரும் கல்வி சூழலில் மென்மையான பேச்சு, அறிவின் உச்சமாய் ஒவ்வொரு செயலிலும் தனி நேர்த்தியுடன் சிறந்த ஆசிரியர்கள், இனத்தை தேசியத்தை உருவாக்குகிறார்கள். கொடுத்ததை திரும்ப வாங்ககூடாது அது பண்பாடு இல்லை. புராதான பழக்கவழக்கங்களின் பண்பாட்டை விட்டுவிட்டு, தாய்மொழியை புறக்கணித்து வாழ முடியாது. தமிழ் சமூகம் கல்வி மீது வைத்திருக்கும் அன்பு அதிகம். எத்தனையோ புத்தகங்கள் படித்து ஆராய்ந்து கற்றுக் கொள்வதை விட, சாமானியனிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். மனிதத்தை தேடுவதும்; மானுடத்தை தேடுவதும் என எழுத்தாளர்கள் எல்லாக் காலத்திலும் முன்கூட்டியே சிந்திக்கிறார்கள் எழுதுகிறார்கள். இலக்கியவாதிகள் சரியானதை எழுதவேண்டும். தவறானவற்றை எழுதக்கூடாது. உணவை விற்பது என்பது அபத்தங்களின் உச்சம். தமிழனுக்கு தெரியாது. உணவை விற்கும் குடும்பத்தினருடன், திருமண பந்தம் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

Login


Visitors Counter