sharingday2017

SHARING DAY - 2017

இரை தேடச் சென்ற பறவைகள் கூடு திரும்பி இளைப்பாறுதலும் பகிர்தலும் போன்று, ஆண்டு முழுவதும் வகுப்பறைகளில் பாடம், புத்தகம், பயிற்சி, தேர்வு, விடைத் தாள் திருத்துதல், விழா நடத்துதல் என ஓடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், தன்னுடன் பயணிக்கும் சக ஆசிரிய நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் நாளே “Sharing Day” எனும் ஆசிரியர்களுக்கான ஆண்டு விழா. ஆசிரியர்கள் தமக்குள் இருக்கும் திறமைகளை, பாடல் குழு, நாடகக் குழு, நடனக் குழு என பல்வேறு குழுக்களாக நிகழ்வுக்கு ஒருவாரம் முன்பே பயிற்றிகள் மேற்கொள்வர். சமூகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் விதமான, நாடகங்களை விவாதித்து அரங்கேற்றுவார்கள். கலை வடிவில் கல்வி ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருந்தால், அந்த ஆண்டில் நிகந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து புகைப்பட காட்சியாக, திரைப்படமாக, அரங்கேற்ற ஒரு குழு காத்திருக்கும். அடுத்த கல்வி ஆண்டில் பள்ளியில், நிகழ இருக்கும் நிகழ்ச்சிகள், பாடத் திட்டத்தில் புதுமை, வகுப்பறை மாற்றங்கள், அடுத்த ஆண்டின் கனவுத் திட்டங்கள் அதைப் பற்றி எல்லாம் விவாதித்து வெளியீட ஒரு குழு தயார் நிலையில் இருக்கும். நமது பள்ளி தலைவர்கள், நம் கல்வி பாதையில் நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கும் ஆசான்கள் எழுத்தாளர் ஞாநி, எழுத்தாளர். ச. தமிழ்ச்செல்வன் அவர்களும், நமது நிறைவுபெற்ற ஓராண்டின் சாதனைகளையும், தொடங்க இருக்கும் ஆண்டுகளில் செல்லவிருக்கும் பாதைகளின் நிறை குறைகளை எடுத்துக் கூறி வழிகாட்டுவார். நம் கலை நிகழ்ச்சிகளின் வழிகாட்டியாக நாடக ஆசிரியர் பார்த்திப ராஜா வழிகாட்டினார். கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, அருஞ்சுவை உணவுகள், பரிசுகள் என நம் பள்ளியின் பண்பாட்டுத் திருவிழாவாய் அழகாய் காட்சி அளிக்கும் நமது பகிர்தல் நாள். பகிர்தல் நாள் அன்பின் வெளிப்பாடாய் அந்த ஆண்டிற்கு டாட்டா காட்டி அடுத்த ஆண்டை துவக்கி வைக்கும்.

Login


Visitors Counter