schoolrecognation2017

SCHOOL RECOGNITION - 2017

தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான தற்காலிக அங்கீகார ஆணை வழங்கிடுவதற்கான கொள்கை முடிவினை அரசு எடுத்துள்ளது. அதனடிப்படையில், மதுரை, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்சியாக திருச்சி மற்றும் சுற்றுவட்டார 9 மாவட்டங்களை சேர்ந்த 409 பள்ளிகளுக்கான தற்காலிக அங்கீகார ஆணை வழங்கிடும் நிகழ்வை நடத்தி தரும்படி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான மாவட்ட ஆய்வாளர் ஆகியோர் நம் பள்ளியை அணுகினர். நல்லெண்ண அடிப்படையில் நிர்வாகம் நிகழ்வினை நடத்தி தந்திட அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் நிகழ்விற்கான பணிகளை தொடங்கினோம். 27/05/2017 நிகழ்வு நாள் அன்று காலை அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், கல்வி அலுவலர்கள், தாளாளர்கள் / பள்ளி முதல்வர்கள் அனைவரையும் வரவேற்று Flex வைக்கப்பட்டது. வகுப்பறைகளுக்கு முன்புறம் தண்ணீர் குடம் வைக்கப்பட்டது. நிகழ்வுக்கான முன்தயாரிப்பு பணிகளை சிறப்பாக செய்து முடித்தனர். ஆசிரியர்கள் குழு நிகழ்வின் Execution பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர். பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை திட்டமிடப்பட்டிருந்தது. காலை எட்டு மணி முதலே மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் பிரதிநிதிகள் வரத்தொடங்கினர். பள்ளி பிரதிநிதிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பார்வையாளர்கள் அரங்கில் அமரவைக்கப்பட்டனர். 11.30 மணி முதல் பதிவு செய்த பங்கேற்பாளர்கள் நிகழ்வரங்கில் அமர வைக்கப்பட்டனர். 01.00 மணி அளவில் கல்வி அமைச்சர் மற்றும் விருந்தினர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்தனர். அவர்களை வரவேற்று உணவு கூடத்திற்கு அழைத்து சென்று, மதிய உணவு பரிமாறப்பட்டது. அமைச்சர்கள் ஒய்வு அறைக்கு சென்றனர். பள்ளிக்கு ஒருவர் வீதம் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, பங்கேற்பாளர்களால் அரங்கு நிறைந்தது. சரியாக 02.15 மணிக்கு நிகழ்வரங்கிற்கு அமைச்சர்கள் / அதிகாரிகள் விழா மேடைக்கு வர, தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமானது. விருந்தினர்களின் மேடைப் பேச்சுக்களுக்கு பிறகு, மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு மேடையில் வைத்தும், இதர பள்ளிகளுக்கு, மாவட்டவாரியாக அவர்கள் இருக்கைக்கு சென்று, தற்காலிக அங்கீகார ஆணை வழங்கப்பட்டது. நாட்டுபண் இசைக்க நிகழ்வு இனிதே முடிந்தது.

Login


Visitors Counter