kanavumeipada_2017_1

கனவு மெய்ப்பட - 2017

“அறம் தான் எல்லா செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றது”

SRV மேல்நிலைப் பள்ளி சமயபுரத்தில், பள்ளி மாணவர்களுக்கான கனவு மெய்ப்பட மாதாந்திர நிகழ்வு 06/07/2017 அன்று நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசியதாவது, பல மதங்களும், பண்பாடுகளும் கலந்ததாகவே இந்தியா இருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றினாலும், எந்த மொழியைப் பேசினாலும் எல்லோரும் இந்தியராகவே அறியப்படவேண்டும். உலகத்திலேயே உறைவிடப்பள்ளி என்ற முறையை தோற்றுவித்து கல்வியை மக்களிடையே பரப்பியது பௌத்த மதம். Oxford, Cambridge போன்ற பல்கலைக்கழகங்களுக்கு நாளந்தா பல்கலைக்கழகம் முன்னோடியாக திகழந்தது. காந்தி நேரு போன்ற தலைவர்களை பற்றி முழுமையாக படிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து சகிப்புத் தன்மையையும், இந்தியாவில் வாழும் அனைவருக்கும் இந்திய நாடு பொதுவானது என்ற சிந்தனையையும் பெறவேண்டும். வரலாறு நிறைய விஷயங்களை நெறிபடுத்துகின்றது. நாம் அதனிடமிருந்து கற்றுகொள்ளவேண்டும். அன்பை தூய்மையை நீதியை தூக்கிப் பிடிப்பவர்களாக, அறத்தை வலியுறுத்தி பேசுபவர்களாக, இந்தியர் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு வாழவேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அதிகாரத்தில் மேல்நிலைக்கு சென்றாலும், காமராஜர், ஓமந்துரார், லால் பகதூர் சாஸ்த்ரி போன்ற தலைவர்களைப் போல நேர்மையை கடைபிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றார். கனவு மெய்ப்பட நிகழ்ச்சியில் SRV பள்ளி செயலர். P.சுவாமிநாதன், இணை செயலா் B.சத்யமூா்த்தி, முதல்வா். K.துளசிதாசன் மற்றும் ஆசிரியா்கள், மாணவர்கள் கலந்துகொண்டனா்.

Login


Visitors Counter