faith2017

FAITH - 2017

பல்வேறு பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் கொண்ட மாணவர்களின் சங்கமமாக, நமது SRV மேல்நிலைப் பள்ளி சமயபுரத்தில், பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியருக்கான The FAITH – நம்பிக்கை பயிலரங்கு கடந்த நான்கு நாட்கள் நடைபெற்றது. தனிநபர் மேம்பாடு, தனி நபர் தொடர்புக் கொள்ளும் திறன்கள் குறித்தும், போட்டிகள் நிறைந்த இந்த உலகில் திறன் வளர்ப்பு பயிற்சிகளை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்குவதன் மூலமாக, ஆக சிறந்த ஆளுமைகளாக அவர்கள் மிளிர்வார்கள் என்பதை கருத்தில் கொண்டே, பயிலரங்கு வடிவமைக்கப்பட்டது. வளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவ மாணவியர்கள் தங்கள் பாடப் புத்தகங்களை தாண்டி, இந்த உலகில் ஒரு முழுமையான ஆளுமையாக உருவாகிட தேவையான மென்திறன், வாழ்க்கைத் திறன் பயிற்சிகள், சமூக கலை இலக்கியம், உடல்நலம், திரைப்படங்கள் என பல்வேறு தலைப்புகளில் சிறந்த ஆளுமைகள் பங்கேற்று பயிலரங்கை சிறப்பாக நடத்தி தந்தனர். பயிலரங்கில் 1200 மாணவ மாணவியர்கள் பங்கேற்று, ஆளுமைகளின் அறிவுரைகளை பெற்றும், தாங்கள் செல்லவேண்டிய பாதைக் குறித்தும் தெளிவும் நம்பிக்கையும் பெற்று கொண்டனர். சமூக திறன்கள் குறித்து எழுத்தாளர் திரு. ஞாநி, தனிநபர் தொடர்பு கொள்ளும் திறன்கள் குறித்து திரு. ரத்னா நடராஜன், திரு. விஷ்ணு குமார், திரு. சரண், உடல்நலம் மற்றும் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து மருத்துவர் அழகப்பன், மருத்துவர். பூங்கோதை, மருத்துவர் உமா, கலை மற்றும் பண்பாடு குறித்து கவிஞர் நந்தலாலா, சிறந்த குறும்படங்களை திரையிட்டு திரைப்படங்களை புரிந்துகொள்வது குறித்தும் பயிலரங்கில் பங்கேற்று மானவர்களிடையே பேசினர். நம்பிக்கை பயிலரங்கில் இணை செயலா் B.சத்யமூா்த்தி, முதல்வா் க.துளசிதாசன் மற்றும் ஆசிரியா்கள், மாணவர்கள் கலந்துகொண்டனா்.

Login


Visitors Counter