dawn2017

DAWN - 2017

நம் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்துள்ள மாணவர்களுக்கான அறிமுக கூட்டம் 10 ஜூன் 2017 அன்று நடத்திட திட்டமிடப்பட்டது. சுமார் 1250 மாணவர்கள் (கடந்த மாதம் 9 ஆம் வகுப்பு சேர்ந்த புதிய மாணவர்கள் 35 பேர் உட்பட) மற்றும் அவர்களின் பெற்றோர் இருவர் என சேர்த்து மொத்தம் 3750 நபர்கள். கடந்த வருடங்களின் அனுபவங்களின்படி பல்வேறு காரணங்களால் கலந்து கொள்வதில் தவறுபவர்கள் என 15 சதம் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டது. அதனடிப்படையில் 3750 நபர்களில் 15 சதம் கழித்து 3200 நபர்கள் வருவார்கள் என முடிவு செய்யப்பட்டது. நிகழ்விற்கு இரு தினங்கள் முன் 1250 மாணவர்கள் பெற்றோர்களின் தொலைபேசி எண்களுக்கு நிகழ்வுக்கான நினைவூட்டல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது. பள்ளி முதல்வர் அவர்களால், நிகழ்வு குறித்த சிறு அறிமுகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வு நாளில், பங்கேற்பாளர்களை வரவேற்று பதிவு செய்து, வழிகாட்டி, அவர்களுக்கான இருக்கையில் அமர வைத்தல் வரை ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு குழுக்களாக ஆசிரியர்கள் பிரிக்கபட்டனர். அவரவர்களுக்கான பணிகளும் பொறுப்புக்களும் குறித்து கூறப்பட்டது. ஆசிரியர்கள் குழு நிகழ்வின் Execution பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர். பிற்பகல் 6 மணி முதல் 8 மணி வரை திட்டமிடப்பட்டிருந்தது. மதியம் 3 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் வரத்தொடங்கினர். நிகழ்வு நாளன்று மாணவர்களையும் பெற்றோர்களையும், வரவேற்று Alphebetical Order Wise பதிவு இடங்களை தயார் செய்து வந்திருந்த மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. சிற்றுண்டி உடன் High Tea தயார் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் வெட்டவெளி அரங்கில் Ampee Theater முன் அமர வைக்கப்பட்டனர். குத்துவிளக்கு ஏற்ற சரியாய் மாலை 6 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பம் ஆனது. பள்ளி செயலர் திருமிகு. P.சுவாமிநாதன், அவர்கள் பள்ளியின் கடந்த பத்தாண்டுகளின் பாதையை பற்றி எடுத்துரைத்தார். இணை செயலா் திருமிகு. B.சத்யமூா்த்தி அவர்கள் ஒவ்வொருவரின் குழந்தைகளையும், தம் குழந்தைகளாக அக்கறையுடன் கவனித்து கொள்கின்றோம் என்பதை கூறி பெற்றோர்கள் மனதில் நம்பிக்கை கொள்ளவைத்தார். முதல்வா்.க.துளசிதாசன் அவர்கள், பள்ளி மாணாக்கர்களை சமூக அக்கறையுள்ள மனிதர்களாக வளர்த்தெடுக்க SRV பள்ளியில் நடைபெற்றுவரும் மாற்றுகல்வி முயற்சிகளை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் பெரும் நம்பிக்கையை விதைத்தது என்பதை அறிந்து கொள்ளமுடிந்தது. நிகழ்வில் இறுதியில் பெற்றோர்கள் எழுதி கொடுத்த Feed Back Form-ஐ படிக்கும் பொழுதும் உணர முடிந்தது. SRV மாணவிகள் நாட்டுபண் பாட நிகழ்வு இனிதே முடிந்தது.

Login


Visitors Counter