TEACHERSDAY2016

TEACHERS DAY CELEBRATION

Resource Person : Mr. D.RAVIKUMAR (Writer)

has consented to be the Chief Guest and deliver the keynote to the "TEACHERS"

DATE : 03.09.2016

DAY : Saturday

TIME : 9.30am

VENUE : Thillai Hall - Girls Block Auditorium

ஆசிரியர் தின விழா

மாணவர்கள் நேசிப்பவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் மாணவர்கள் நேசிப்பவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்றார் எழுத்தாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான து.ரவிக்குமார். ஆசிரியர் தினத்தையொட்டி திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது: ஆசிரியர் என்பது பணி நிமிர்த்தமாக உங்களுக்கு இருக்கும் அடையாளம். அன்பு காட்டுவதும்,போதிப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. வேதியியல், இயற்பியல்,கணிதம், ஆங்கிலம் என ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொருவரும் சிறந்தவர்களாகத் திகழலாம். ஆனால், நீங்கள் மாணவர்கள் நேசிக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும். வகுப்பறையில் நடத்தவேண்டிய பாடத்திட்டங்களையும தாண்டி ஆசிரியர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியது அன்புதான். வகுப்பறையில்நீங்கள் பாடம் நடத்தி மாணவர்களை புரிந்து கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு கோபம் வரும். நாம் நடத்தியதை மாணவர்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லையா, மொழியில் பிரச்னையா, மாணவர்கள் புரிந்து கொள்ளும் தொடர்பில் பிரச்னையா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும் போது இவற்றையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கு அன்பு தேவைப்படுகிறது. மாணவர்களின் கற்றல்திறனை மேம்படுத்த வகுப்பறை சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியருடன் இணக்க உறவு மாணவர்களுக்குத் தேவைப்படுகிறது. நம்மை பிடிக்காத மாணவர்களுக்கு நீங்கள் எவ்வளவு பாடம் நடத்தினாலும் பிரயோஜனம் இருக்காது. மாணவர்கள் ஆசிரியர்களை நேசிப்பவராக இருக்க வேண்டும். வகுப்பறைகளில் பரஸ்பர அன்பு இருக்க வேண்டும்எனபது புதிய,பழையக் கல்வி முறை, குலக்கல்வியில் எதிலும் சொல்லப்படவில்லை. மாணவர்களை மதிப்பெண்கள் மட்டும் பெறுபவர்களாக நமது தேர்வு முறையை மாற்றிவிட்டார்கள்.கல்வியும் அதைநோக்கிச் செல்கிறது. தற்போதையநிலையில் பணம் இல்லை, உணவு இல்லை என்பதைத்தான் பொருளாதார,உணவு வறுமை எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இதையும் தாண்டி பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வறுமை கலாசார வறுமைதான் மிகவும் கொடியது. நமது மாணவர்களுக்கு பண்பாடு, அடையாளம் தெரியவில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் மாணவர்களை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிடுகின்றனர். அவர்களை மதிப்பெண்கள் பெறும் நோக்கில் ஆசிரியர்கள் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். இன்றைய நிலையில் சமூகத்தில் பலவித நிலைகளில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகப்படுகின்றனர். எந்தவிதத்திலும் அவர்கள் இதில் பொறுப்பானவர்கள் அல்ல. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்டங்களை இயற்றினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் 421 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரத் தகவல்தெரிவிக்கின்றன. கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள்,விளையாட்டு மைதானங்கள், நவீன கல்வி உதவி சாதனங்கள், சரியான அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதம் போன்றவை இருந்தும் தடைகல்லாக இருப்பது ஆசிரியப் பயிற்சிதான். இவற்றை சரிபடுத்தினால்தான் கல்விச்சூழல் மேம்படும். இந்தியாவில் 26 கோடி மாணவர்களுக்கு 1 கோடி ஆசிரியர்கள் உள்ளனர். தமிழகத்தில் 1.18 கோடி மாணவர்கள். மொத்த மாணவர்களில் 47 சதவிகித்தினர் இடைநிற்றலாகிவிடுகின்றனர். இதே நிலைதான் பட்டப்படிப்பு, முதுநிலை,முதுகலைப் பட்டப்படிப்பு, ஆய்வுநிலைகளிலும் இருக்கிறது. மாணவர்களின் இடைநிற்றலைத்தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதையும் தாண்டிஉளவியல் ரீதியான காரணிக்கக்கூடும். அதைத் தடுக்கவேண்டிய வாய்ப்பு ஆசிரியர்களுக்குத்தான் உள்ளது.நாம்தான் அவர்களுக்கு சரியான பதிலைத் தர வேண்டும். வகுப்பறையை அன்பு சூழ்ந்த சூழலாக உருவாக்கவேண்டும்.தேடல்மிகுந்ததாக வகுப்பறையை உருவாக்கவேண்டும்,. இதுதான்இன்றைய அடிப்படைத் தேவையாகும் என்றார் ரவிக்குமார்.

Login


Visitors Counter