SPORTS DAY 2016

Independence Day & Sports Day - 2016

சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதினவிழா மற்றும் விளையாட்டு விழா கடந்த ஆகஸ்டு 15 - ந் தேதி நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் துளசிதாசன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் சத்யமூர்த்தி வரவேற்றார். விழாவில் பள்ளி செயலாளர் சுவாமிநாதன் ஒலிம்பிக் கொடியேற்றினார். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. விழாவில் பெங்களுரு மத்திய வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் பாலமுருகன் பேசியதாவது. உலக அளவில் மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் இந்தியர். சுமார் 17 சதவீதம் பேர் உலக மக்கள் தொகையில் இந்தியர்கள் உள்ளனர். அந்த வகையில் பார்த்தால் ஒலிம்பிக் விழாவை விடவும் இந்திய சுதந்திர தினவிழா அதிக நபரால் கொண்டாடடப்படும் ஒரு விழா. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் கிடைக்கவில்லை என்று நாம் வருத்தம் கொள்ள தேவையில்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் முன்னேறி வருகிறது. நம் நாட்டில் உரிமைக்காக எந்த நேரமும் வீதியில் வந்து போராடக்கூடிய சுதந்திரம் நமக்கு இருக்கிறது. சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுவதுடன் நிறுத்திக்கொள்ளக்கூடாது. நல்ல குடிமகனாக நடந்து நாட்டின் மேன்மைக்கு பங்காற்ற வேண்டும். நல்ல குடிமகனாக திகழ வேண்டுமானால் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும். வாழ்க்கையில் வெற்றி என்பது நீங்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பதுதான். நீங்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன தேவையோ அதை அடைந்துவிட்டாலே நீங்கள் வாழ்க்கையில் வெற்றி வெற்றவர்தான். தோல்விகள் நேர்ந்தாலும் மனம் தளர்ந்து வெற்றியாக மாற்றுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிக்கோள், நேர்மறை அணுகுமுறை, சுறுசுறுப்பு, அன்போடு இருத்தல், தோல்வியில் இருந்து மீண்டுவருதல், புத்தகங்கள் வாசித்தல், துணிவு, தன்னம்பிக்கை, கவனம் சிதறாமை, சுய விருப்பம் நோக்கி பயனித்தல், அர்ப்பணிப்பு உணர்வு, மன உறுதி ஆகிய 12 குணங்களையும் பின்பற்றினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியடையலாம் என்றார். துணை முதல்வர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

Login


Visitors Counter