Leadership4_2016

LEADERSHIP PROGRAMME

Date: 19.11.2016

Day: Saturday

Time: 9.30am

Resource Person: Mr. A.R. VENKATACHALAPATHY

Venue: School Premises

சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்.

சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்றார் வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடஜலபதி. திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற வையத் தலைமைக் கொள் நிகழ்வில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது. சில நேரங்களில் குறைபாடுகள்தான் வாய்ப்பாக மாறுகின்றன. எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொடுக்கும் பெற்றோர்களும் பள்ளிகளும் அமைந்துவிட்டால், மாணவர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லாமல் போய்விடும். சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். மருத்துவம், அறிவியல் படிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், வரலாறு, சமூகம், அரசியலை ஆய்வு கெய்வதற்கு ஆள்கள் இல்லை. எனவே, இந்த படிப்புகளில் போட்டிக் குறைவாக இருக்கிறது. மருத்துவம், அறிவியல் படிப்பபை மட்டும் அதிகமானவர்கள் படித்தால், நாடு ஒரு பக்கம் வளர்ந்தும், மறுபுறமும் தாழ்ந்து இருக்கும். சமூகப் பிரச்னையை புரிந்து கொள்ளவும், அதை தெளிவாக எடுத்துச் சொல்லவும் ஆள்கள் இல்லை. எனவே, மாணவர்கள் அதை நோக்கி படிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு முதியோர்கள் அதிகம் உள்ள நாடாக மாறும். அப்போது, முதியோர்களை எப்படி காப்பாற்ற போகிறோம்., முதியோர்களுக்கான காப்பகங்களை எவ்வாறு உருவாக்கப் போகிறோம். இது போன்ற சமூகப் பிரச்னைகளை புரிந்து கொள்ள, மக்களிடம் எடுத்துச் சொல்ல இங்கு ஆள்கள் இல்லை. குடும்பங்கள் நேரடியாகப் பாதிப்படைதலும், மன அழுத்தம் நிறைந்த சமூகமாக மாறிக் கொண்டு இருத்தலும், கிராமங்களை விட்டு நகரத்தை நோக்கி மிகப்பெரிய கூட்டம் சென்று கொண்டு இருத்தலும் இந்த 20 ஆண்டுகளில் அதிகமாயிருக்கிறது. இதற்ாகன போக்குவரத்து, தேவையான நீர், உணவு, வாழும் இடம், மருத்தும், சுகாதாரம், இவற்றையெல்லாம் உருவாக்கி இருக்கிறதா என்பதை பற்றிய ஓர் ஆய்வு இங்கு தேவையாக இருக்கிறது என்றார் வேங்கடஜலபதி. நிகழவில், பள்ளிச் செயலர் பி. சுவாமிநாதன், துணைத்தலைவர் எம்.குமரவேல், இணைச் செயலர் பி. சத்தியமூர்த்தி, முதல்வர் க. துளசிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Login


Visitors Counter