KANAVU MEIPADA 5

கனவு மெய்ப்பட

காரியத்தில் உறுதியோடு இருப்பவருக்கே கனவு மெய்ப்படும்

காரியத்தில் உறுதியோடு இருப்பவர்களுக்கே கனவு மெய்ப்படும் என்றார் கவிஞர் நந்தலாலா. கனவு மெய்ப்பட நிகழ்வில் கவிஞர் நந்தலாலா அவர்கள் கலந்து கொண்டு பேசிய உரையிலிருந்து… உலகிலேயே மிகச்சிறந்த அறிவாளிகளாக நான் கருதுவது மாணவர்களைத்தான். ஏனென்றால் எதையும் உடனடியாக நம்ப மறுப்பர். மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பர். எனவே அவர்கள் முன்பு பேசும் போது கவனமாக பேச வேண்டும். நாம் நேரத்தை தேவையில்லாத வீண் பேச்சிலும், நடிகர்கள் குறித்து பேசியும், தொலைக்காட்சி அரசியல் அரட்டையைப் பார்த்தும் கழிக்கிறோம். மாணவர்கள் புதிதாக யோசிக்கப் பழகவேண்டும். வாழும் நிமிடங்களில் யார் அர்த்தத்தோடு இருக்கிறார்களோ அவர்கள்தான் காலத்தால் நிலைத்து நிற்கிறார்கள். எவரும் சொல்லாத செய்தியை சொல்பவர்தான் நிலைத்து நிற்பவர்கள். தான் செய்யும் காரியத்தில் உறுதியோடு இருப்பவருக்கே கனவு மெய்ப்படும். செய்யும் வேலையை உளதிருப்தியோடு செய்ய வேண்டும். செய்யும் வேலையை ஒழுங்காகச் செய்கிறோம் என்று மனசாட்சி சொன்னால், அது சிறந்த வேலை. அந்த வேலையை உலகம் பாராட்டாமல் இருக்கலாம், அது குறித்து கவலைகொள்ள வேண்டியதில்லை. நம் வாழ்க்கை ஓட்டத்தில் செய்யும் நல்ல செயலும் அதை பற்றிய நினைவுகளும் தான் உண்மையான வாழ்க்கை என்றார்.

Login


Visitors Counter