kanavuMeipada3_2016

KANAVU MEIPADA

ஆதாரங்கள் தர இயலாத நம்பிக்கையே மூட நம்பிக்கை அறிவியல் அறிஞர் த.வி.வெங்கடேஸ்வரன் கனவுமெய்ப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.அறிவியல் அறிவு, நம்பிக்கை, கருத்து, மூடநம்பிக்கை குறித்து அவர் பேசியதாவது. ஒருவரைப் பற்றி அறிந்திருப்பது பல்வேறு செய்திகளை தெரிந்துவைத்திருப்பது, திறமையாக இருப்பது, நடைமுறை விதிகளைப் பின்பற்றுவது போன்றவையெல்லாம் அறிவாகாது. உலகம் குறித்த மெய்யறிவுதான் அறிவு. சமூக வாழ்க்கையில் இயங்க வேண்டுமென்றால், அறிவியல் அறிவைப் பயன்படுத்த வேண்டும். புரி ஈர்ப்பு சக்தி குறித்து 1500 ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாட்டில் கூறியிருக்கிறார். அவெருக்குப் பிறகு பிரம்மகுப்தர் கூறியிருக்கிறார். இருவரது விஞ்ஞான கருத்துக்கும் நிரூபணம் இல்லை. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயல்பு உண்டு என்றும் அரிஸ்டாட்டில் கூறினார். அதற்கும் நிரூபணம் இல்லை. இவர்களது கருத்தில் இருந்து சற்று மாறுபட்டு கலிலியோ கூறினார். அதில் இருந்து நியூட்டன் கூறினார். எங்கும் எப்போதும் பொருந்தக்கூடிய விடையே அறிவியல். அது பரிசோதனை மூலம் அறியக்கூடியது. விஞ்ஞானிகளின் கருத்துகள், கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் உண்மையாகின்றன. பண்பாடு அல்லது தனிப்பட்ட ஒன்றைப் பற்றிய கருத்தே நம்பிக்கை. ஒன்றைப் பற்றிய அனுமான அறிவே கருத்து. ஆதாரங்கள் தர இயலாத நம்பிக்கையே மூடநம்பிக்கை என்றார் வெங்கடேஸ்வரன். நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைவர் ஏ.ராமசாமி தலைமை வகித்தார். திருப்பத்தூர் கல்லூரி பேராசிரியர் கே.பார்த்திபராஜா வாழ்த்திப் பேசினார்.

Login


Visitors Counter