SANGAMAM 2016

“சங்கமம் – கலைச்சாரல் 1”

 

DATE : 10.09.2016

DAY : Saturday

TIME : 6.00pm

VENUE : Open Ground

Students : IX to XII Hostel Students

Participants : IX to XII Hostel Students Cultural Programs

இணைச்செயலரின் ’ஒரு புதிய செயலி’

மாணவர்களை ஒன்றுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக நுட்பமாக திட்டமிட்டு மாணவர்களுக்குள்ளே பல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் மையப்படுத்தப்பட்ட தனித்தனி பணிகள். மல்லிகை,அல்லி,காஞ்சி,குவளை இந்த நான்கு விடுதிகளிலும் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு குழு காலையில் மாணவர்களை எழுப்பி படிக்கத்தூண்டும். அடுத்த குழு நடைபயிற்சிக்கும், உடற்பயிற்சிக்கும் அழைத்து செல்லும். அந்த பக்கம் காலை உணவும், மதிய உணவும் சிந்தாமல் சிதறாமல் பரிமாறப்படுகிறதா என்று மற்றொரு குழு கண்காணிக்கும். மாலை 5 மணிக்கு கிளம்பி ஒரு குழு வேகமாக நூலகம் போகும். ஓ ஹென்றி படிக்கும், ஹெமிங்வே பற்றி விவாதிக்கும் நம்மை விட்டு மறைந்து போன கவிஞன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும். காலையும் மாலையும் நடைபெறுகின்ற படிப்பு நேரத்தை (Study hours) உற்சாகமாக கடைபிடிக்க மற்றொரு குழு துணை செய்யும். இப்படி நான்கு விடுதிகளிலும் செயல்படுகிற குழுக்களுக்கு மாணவர்களே சுழற்சி முறையில் தலைவர்களாக பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். மாதத்தில் ஒரு நாள் மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்திலுள்ள ஆம்பி தியேட்டரில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் கலை இலக்கிய வடிவத்தில். தனி நடிப்பு, பாட்டு, நடனம், பட்டி மன்றம், குரலிசை, மௌன மொழி என கலைகட்டுகிறது புதிய செயலி. இவை அழகாக வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை பள்ளியின் இணைச்செயலர் டாக்டர்.பி.சத்யமூர்த்தி அவர்களுக்கே சேரும். அவருக்கு துணையாக விடுதி ஆசிரியர்களும், கண்காணி்ப்பாளர்களும் விளையாட்டு துறை ஆசிரியர்களும் பக்கபலமாக இருப்பது கூடுதல் சிறப்பு.

Login


Visitors Counter