FOODCARNIVAL_2016

இயற்கை சிறுதானிய உணவு

ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் இயற்கை சிறுதானிய உணவு வகைகளை அடுப்பில்லாமல் நெருப்பில்லாமல் செய்து காட்டி அசத்தினர். திணை மாவு உருண்டைகள், பலவகையான பழரசம், விதவிதமான பழக்கூட்டு தயாரித்து காட்சிப்படுத்தினர். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், பேராசிரியர்.கி.பார்த்திபராஜா, பள்ளி முதல்வர் க.துளசிதாசன் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். மாணவிகள் தாங்கள் சமைத்து பதார்த்தங்களை அன்பாய் பரிமாறினர். பார்வையாளர்கள் எதனை உண்பது எதனை தவிர்ப்பது என்று தெரியாமல் ருசித்து மகிழ்ந்தனர்.

Login


Visitors Counter