ARTCAMPKUMBAKONAM

ART CAMP - KUMBAKONAM

DATE : 06.10.2016

DAY : THURSDAY

Student from VI to VIII, IX & XI Boys and Girls went to Govt College of Fine Arts, Kumbakonam for ART CAMP

ஒரு நாள் கும்பகோணம்

அக்டோபர் 6 காலை 7.00 மணிக்கு 55 மாணவ மாணவிகளை சுமந்து கொண்டு பள்ளி பேருந்து கும்பகோணம் நோக்கி நகர்ந்தது. ஒவ்வொரு குழந்தையும் காலை நேரத்து குருவிகளைப்போல உற்சாகமாயிருந்தனர். பள்ளி நுண்கலை மன்றத்து பிள்ளைகள் தங்களுக்கான தூரிகையோடும் வண்ணங்களோடும் பயணித்தனர். தஞ்சை, பாபநாசம் வழியாக கும்பகோணம் நுண்கலை கல்லூரிக்கு சென்ற பொழுது கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் வாசலுக்கு வந்து கைத்தட்டி வரவேற்றது புதியன விரும்பிய குழந்தைகளை உற்சாகப்படுத்தியது. ஓவியம் தீட்டுதல், சிற்பம் செய்தல், களிமண் சிற்பங்கள், நவீன ஓவியங்கள் எப்படியெல்லாம் உருவாக்கப்படுகின்றன என்பதை நேரடியாக பார்த்து தெரிந்துகொண்டனர். குழந்தைகளை மாடலாக அமர்த்தி ஓவியம் தீட்டியது அவர்களுக்கு ஒரு புது அனுபவம். ஓவிய கல்லூரி பேராசிரியர் திரு.சந்திரசேகர் குழந்தைகளின் மனநிலைக்கேற்ப ஒவ்வொன்றையும் விளக்கிசொன்னது அவரின் கலை உள்ளத்தை காட்டியது. புகைப்படக் கலை குறித்தும் விஷ்வல் மீடியா குறித்தும் குழந்தைகளுக்கு அவருக்கே உண்டான பாணியில் எடுத்துரைத்தார். வரும் வழியில் தாராசுரம் கோயிலை சுற்றிப்பார்த்தார்கள். கடந்த முறை தாராசுரம் கோயிலை சுற்றிக்காட்டி விளக்கம் சொன்ன கலை விமர்சகர் திரு.தேனுகா இன்று இல்லையே என்ற கவலையோடு வீடு திரும்பினார்கள். மறுநாள் காலை 9.00 மணிக்கு இதே கலைக்குழு போய்சேர்ந்த இடம் திருவெள்ளரை. இது பாடல் பெற்ற தளம். அழகும் கம்பீரமும் நிறைந்த இக்கோயில் சிறுசிறு குன்றுகளால் சூழப்பெற்றுள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழக ஓவிய பேராசிரியர் மாணிக்கவாசகன் தலைமையில் நண்பர்கள் முத்துச்செல்வன், பிரிட்டோ மாணவர்களுக்கு இயற்கையைப் புரிந்து கொண்டு வரைவது குறித்து பயிற்சி அளித்தனர். ஒரு ஓவியம் எப்படி உருவாகிறது என்பதை தத்ரூபமாக காட்சி வடிவத்தில் விளங்கிக்கொள்ள இந்த முகாம் களமாக அமைந்தது.

Login


Visitors Counter