FAITH2016

THE FAITH – BRIDGE COURSE

பதினோறாம் வகுப்பில் பள்ளியில் இணைந்திருக்கின்ற புதிய மாணவ செல்வங்களுக்கு ஒரு வாரகாலம் THE FAITH – BRIDGE COURSE மிகச்சிறப்பாக நடைபெற்றது. வளர்ந்து வரக்கூடிய மாணவச் செல்வங்கள் பாடத்திட்டம் மட்டுமல்லாது வேறு பல விஷயங்களிலும் ஒரு அறிமுக அளவிலான திறன்களாவது பெற்றிருக்கவேண்டும். மதிப்பெண்கள் எத்துனை அவசியமோ அத்துனை அவசியம் வாழ்க்கைத்திறன்கள். தன்னை உணர்வதும், எது தலைமைபண்பு என்று அறிவதும், எவை ஆளுமைத்திறன்கள் என்று அறிந்துகொள்வதும் இப்பொழுது அவசியமான ஒன்றாகும். கலை இலக்கியம், இசை, ஓவியம், சமூக விழுமியங்கள், உரையாடும் விதம், உறவாடுகிற கலை, ஆண் பெண் சமத்துவம், வரலாறு, உடல்நலம், சமூக அறம், நட்பு பேணுதல், சினிமா, சமூக ஊடகங்கள், வாசிப்பு பண்பாடு, படிக்கின்ற பாடத்தில் கற்றுத்தேர்தல், முழு ஈடுபாடு இப்படி பல்வேறு பொருள்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகள் ஒரு வார காலத்திற்கு அத்துனை மாணவர்களையும் சந்தித்து உரையாடி, சிந்தனையைக் கூர்தீட்டினர். பேரா.ராஜா கோவிந்தசாமி, பேரா.ஸ்ரீ ராமசந்திரன், கவிஞர்.நந்தலாலா, ஆவணப்படஇயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார். எழுத்தாளர்.பவா செல்லதுரை. மனிதவள பயிற்றுனர் கார்த்திக், கணேஷ். பேரா.ரத்தின நடராஜன், மருத்தவர்கள் குமாரபாபு, டாக்டர் பூங்கோதை எழுத்தாளர் ஏ.எஸ் பத்மாவதி, எழுத்தாளர்.ஞாநி ஆகியோர் கலந்து கொண்டு மிகச்சிறந்த நம்பிக்கை அளிக்கும் விதமாக ஒரு உயிர்ப்பான நிகழ்வை நடத்திக்காட்டினர். மாணவர்கள் மத்தியில் ஒரு புதிய எழுச்சியை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை. பவா செல்லதுரை கதைசொன்ன போதும், எழுத்தாளர்.ச.தமிழ்ச்செல்வன் திரையிடல் மூலமாக சமூக அறம் போதித்த போதும், எழுத்தாளர்.பாஸ்கர் சக்தி கற்பனை திறனை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என விளக்கிச்சொன்ன போதும் மாணவர்கள் சிலாகித்துப்போனது முற்றிலும் உண்மை.

Login


Visitors Counter