CARRIER GUIDANCE 2016

திசைகாட்டி 2016

மருத்துவம் பொறியியல் இந்த இரண்டை தாண்டி உலகம் எவ்வளவு பெரியது என்பதை மிக விஸ்தீரனமாக சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கமாக திசைகாட்டி 2016 என்ற பெயரில் ஒரு புதிய எழுச்சி மிகுந்த நிகழ்ச்சியை நடத்தியது. சுமாராக 4000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒரு பிரம்மாண்டமான மாநாட்டு பந்தலில் நடைபெற்றது. 80க்கும் மேற்பட்ட துறைகள் குறித்தும் பட்டப்படிப்புகள் குறித்தும், பட்ட மேற்படிப்புகள் குறித்தும் மிகவிரிவாக எடுத்துச்சொல்லப்பட்டது. அரங்கத்திலிருந்து அத்துனை பேரும் பார்த்து, கேட்டு புரியும் வண்ணமாக அரங்கம் முழுக்க எல் இ டி திரைகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. சென்னையிலிருந்து இத்துறை நிபுணர் திரு.நெடுஞ்செழியன் மிகவிரிவாக மேற்படிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். கலை இலக்கியம் அறிவியல் கணிதம் பொறியியல் வணிகவியல் மருத்துவம் மேலாண்மை தொழில்நுட்ப கழகங்கள் சட்டம் வரலாறு ஆங்கில இலக்கியம் தணிக்கைவியல் நிர்வாகவியல் மற்றும் பல்வேறு படிப்புகள் குறித்தும் அது சார்ந்த கல்வி நிறுவனங்கள் குறித்தும் எடுத்துச்சொன்னதோடு நுழைவுத்தேர்வு சம்மந்தபட்ட விஷயங்களையும் அழகாக எடுத்துரைத்தார். கல்வி சார்ந்த பல புதிய ஜன்னல்கள் திறக்கப்பட்டன

Login


Visitors Counter