VIDUMURAIKU PIN VPU 2017

விடுமுறைக்குப்பின் வந்து சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள்

தேர்வு முடித்து, விடுமுறை தொடங்கிவிட்டது என்ற மகிழ்வுடன் மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். பத்து நாட்கள் மாணவர்களைக் காணாமல் எவ்வாறு நகர்த்துவது? என்ற ஏக்கத்துடன் பணிகளைத் திட்டமிடத் தொடங்கினோம். விடுமுறைக்குப்பின் வரும் குழந்தைகளை எவ்வாறு மனமகிழ்வுடன் வகுப்பறையில் நுழைய வைக்கலாம் என யோசித்தோம். வண்ணத்துப் பூச்சிகளின் நுழைவாயிலில் குழந்தைகளை வரவேற்க, வண்ண வண்ண காகித வண்ணத்துப் பூச்சிகளையும், டிசம்பர் / ஜனவரி மாத சிறப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் பரிசுப்பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மரம், புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன் அமைந்த தோரணம் போன்றவற்றை உருவாக்கினோம். ஒவ்வொரு வகுப்பறையிலும் குழந்தைகள் கூடி விளையாட சில விளையாட்டுக்களை உருவாக்கினோம். ஒவ்வொரு பாடத்திலும் புதிர், வார்த்தை விளையாட்டு, புதிய சொற்கள் உருவாக்கல், அறிவியல் அறிவோம், சூழல் உணர்தல் என பல்வேறு தலைப்புகளில் உத்வேகத்துடன் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பல விளையாட்டுக்களை வடிவமைத்தோம். விடுமுறைக்குப்பின் வண்ணத்துப்பூச்சிகள் வந்து சேர்ந்தன வகுப்பறைக்குள். வண்ண வண்ண ஓவியங்கள் பொம்மைகளுடன் காட்சியளித்த, தம் புதிய வகுப்பறைகளை பார்த்த வண்ணத்துப்பூச்சிகள் Happy New Year - Happy New Classrooms என்று பாடத்துவங்கின.

Login


Visitors Counter